கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

திங்கள், 18 ஜூலை, 2011

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்.

உலகமெங்கும் 3D ஜிரமடித்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில் LG தனதுபங்கிற்க்கு உலகின் முதலாவது 3d Smartphone ஆன LG Optimus 3D யினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்க்கனவே இந்தவருடம் வெளியாகி சக்கைபோடுபோட்டுக்கொண்டிருக்கும் Nintendo 3Dsயினைப்போலவே கண்ணாடியின் உதவியின்றி 3D அனுபவத்தினை இதில் அனுபவிக்கலாமென்பது இதன்சிறப்பம்சமாகும்..  இதன்மூலமாக உலகில் ஒரு புதியபுரட்ச்சியினை ஆரம்பித்துவைத்தது மட்டுமின்றி
இரண்டுலென்சுகளையுடைய Dual 5MP கமராவினையும் இந்தத்தொலைபேசியினுள் வடிவமைத்துள்ளது..இதன்மூலம் நீங்கள் 3Dவீடியோக்களை சொந்தமாக தயாரித்து இணையத்தில் உலாவிடலாம். அத்துடன் மேம்படுத்தப்பட்ட 4.3″ touchscreen வசதியுடன் கணனிகளில் இதுவரைபயன்படுத்தப்பட்ட Dual-Core Memory யினை தன்னகத்தேகொண்டுள்ள உலகின் முதலாவது கைத்தொலைபேசி என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தவருடம் ஜீன்மாதம் வெளியாகவிருக்கும்LG Optimus 3D பலத்தஎதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது..

0 comments:

கருத்துரையிடுக