யாழ். சுபாஸ் விடுதி இன்று உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது! வீதியும் பொதுமக்கள் பாவனைக்கு திறப்பு
[ வியாழக்கிழமை, 17 மார்ச் 2011, 01:34.17 PM GMT ]
கடந்த 15 வருடங்களின் பின்னர் யாழ்.சுபாஸ் விடுதி இன்று அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் 16 வருடங்களின் பின்னர் யாழ்.விக்டோரியா வீதி பொதுமக்கள் பாவனைக்கெனத் திறந்து விடப்பட்டுமுள்ளது.
இந்நிகழ்வு இன்று நண்பகல் நடைபெற்றது. இதன்போது யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க கலந்து கொண்டு இவற்றைக் கையளித்தார். சுபாஸ் விடுதி கடந்த காலங்களில் 51வது படையணியின் தலைமையகமாக இருந்தது.
தற்போது மேற்படி படையணியின் தலைமையகம் கோப்பாய் மவீரர் துயிலும் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஸவின் பணிப்பின் பெயரில் சுபாஸ் விடுதி விடுவிக்கப்பட்டதாக கட்டளைத்தளபதி தெரிவித்தார்.
மேலும் சுபாஸ் விடுதிக்கான வீதியான விக்டோரியா வீதியும் இன்று பொதுமக்களின் பாவனைக்கென கையளிக்கப்பட்டது. இதன்போது சுபாஸ் விடுதியின் உரிமையாளர் எஸ்.ஹரிகரன் விடுதிக்கான உரிமத்தை ஏற்றுக்கொண்டார்.
வியாழன், 17 மார்ச், 2011
யாழ். சுபாஸ் விடுதி இன்று உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது! வீதியும் பொதுமக்கள் பாவனைக்கு திறப்பு
Labels:
யாழ்ப்பாண செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 comments:
வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
@#$%^&*}ㄖɍ╓ȣ - என்ன ஒன்னுமே புரியலயா? அப்ப இதுதான் தொழில் நுட்பம்.
கருத்துரையிடுக