கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வியாழன், 4 அக்டோபர், 2012

நாடு திரும்பும் சீன விண்கலம்


விண்வெளி ஆய்வுக்காக சென்ற ஷென்ஷோ-9 என்ற விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைப் போன்று விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த 16ஆம் திகதி சீனாவின் வடக்கு பகுதியில் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து ஷென்ஷோ- 9 என்ற விண்கலம் புறப்பட்டது.

இந்த விண்கலத்தில் முதன் முறையாக பெண் விமானி லியு யாங்(வயது 33) உட்பட, ஜிங் ஹைபெங்(வயது 45) மற்றும் லியூ வாங்(வயது 43) ஆகியோர் பயணம் செய்தனர்.
கடந்த 19ஆம் திகதி இந்த விண்கலம் பூமியில் இருந்து 343 கிமீ தொலைவில் பறந்து கொண்டிருக்கும் டியான்காங் 1 என்ற ஆய்வு மையத்தை சென்றடைந்தது.
அங்கு அவர்கள் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர். ஆய்வுப்பணி முடிந்ததையடுத்து இன்று மாலை அல்லது இரவு இந்த விண்கலம் வெற்றிகரமாக பூமி திரும்புகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விண்வெளி அதிகாரிகள் செய்து வருகி்ன்றனர்.



0 comments:

கருத்துரையிடுக