கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 17 ஜூலை, 2012

நியூசிலாந்தில் ரயிலை வாங்குவதற்கு விண்ணப்பித்த 4 வயது சிறுவனால் பரபரப்பு

நியூசிலாந்தில் ரயில் ஒன்றை வாங்குவதற்கு, நான்கு வயது சிறுவன் ஒருவன் இணையத்தளம் மூலமாக விண்ணப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெலிங்டன் மாகாண சபையின் போக்குவரத்து பிரிவான மெட்லிங் நிறுவனம் பழைய ரயில்
ஒன்றை விற்பனை செய்வதற்காக “ட்ரேட் மீ” என்னும் ஏலவிற்பனை இணையத்தளம் மூலம் அறிவித்தல் விடுத்தது.
அறிவித்தல் வெளியான பின்பு முதலாவது பிரதிபலிப்பாக 29,000 டொலர்களுக்கு அந்த ரயிலை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பமொன்று கிடைத்தது.
தமது பழைய ரயிலை விற்க வாய்ப்பு கிடைக்கிறது என்று நம்பிய மெட்லிங் நிறுவன அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் ஆர்வம் மிகுந்த நான்கு வயது சிறுவன் ஒருவனே இவ்விண்ணப்பத்தை அளித்தது என அறிந்து அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அச்சிறுவனின் தாய் மின்னஞ்சல் மூலம் அதிகாரிகளுக்கு உண்மையை விளக்கினார்.
அவர் கூறுகையில், எனது நான்கு வயது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனே இந்த விண்ணப்பத்தை செய்தான். உண்மையில் நான் இந்த ரயிலை வாங்க விரும்பவில்லை. அந்த விண்ணப்பத்தை நீக்க முடியுமா? என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரேட் மி என்ற இணையத்தளம் அப்பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் மேற்படி விண்ணப்பத்தை நீக்க சம்மதித்தது.

0 comments:

கருத்துரையிடுக