கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வெள்ளி, 29 ஜூன், 2012

உலகின் முதலாவது எந்திர மீன்

ரோபாட் என்று அழைக்கப்படுகிற எந்திர மனிதனைப் பார்த்து நம்மில் பலரும் இன்னும் வியந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் உலகின் முதலாவது எந்திர மீனை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.
இத்தாலியை சேர்ந்த தேசிய ஆராய்ச்சிக் கழகம் மற்றும் நிïயார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தான் இந்த ரோபாட் மீனை உருவாக்கி உள்ளனர்.
இந்த எந்திர மீனைக் கொண்டு மீன்களின் நடத்தை பற்றி ஆராய வழி பிறந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எந்திர மீனை தண்ணீரில் விட்டபோதுஇ அதன் வால் பகுதி உண்மையான மீனை விட வேகமாக அசைவதைக் கண்ட மீன்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துள்ளன. சரக்கு கப்பல் விபத்துக்களால் கடலில் எண்ணெய் படலம் ஏற்படுகிறபோது கடல் வாழ் மீன்களுக்கு ஆபத்து நேரிடுகிறது. அத்தகைய தருணத்தில் கடல் வாழ் மீன்களை ஆபத்திலிருந்து விலகிச் செல்ல வழி நடத்துவதில் இந்த எந்திர மீன் உதவியாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

0 comments:

கருத்துரையிடுக