கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

திங்கள், 18 ஜூலை, 2011

ஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject உடன் வரும் message-ஐ எப்படி மறைப்பது)

நேற்று கூகிள் ஆப்ஸ் (Google Apps) நிறுவுவதற்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றிருந்த போது, ஜிமெயில் அல்லாத வேறு மின்னஞ்சல் சேவைகளைப்  பயன்படுத்தவே ஆர்வம் காட்டினர், அவர்கள் பொதுவாக ஜிமெயில் உபயோக படுத்துவதில்லை போலும்.

காரணம் கேட்டதற்கு, ஜிமெயிலில் மின்னஞ்சல் உட்பொருள் (Subject) உடன் உள்ளடக்க செய்திகளையும் (message content) காட்டுவதால் அலுவலகத்தில் பிறர் முன்னிலையில் உபயோகிப்பது சிரமமாக உள்ளது என்றனர்.



இந்த பண்பாடு, மின்னஞ்சல்களை எளிதாகவும், விரைவாகவும் தொகுக்க உதவுகின்ற போதிலும்,  பொது இடங்களில் பயன்படுத்தும் பொழுது தனிமனித ரகசியங்கள் (privacy) பகிர்வதைத் தடுக்க முடியாமல் போய் விடுகிறது.



இந்த வசதியை ”சினிபெட்”(Snippet) என்றழைக்கின்றனர். இது ஜிமெயிலின் கூறாநிலைக் கூடுதல் வசதியே (Default Additional  Functionality) ஆகும், இதை விரும்பாதவர்கள் நீக்கிவிடலாம்.

சினிப்பெட்டை நீக்குவதற்கு, ஜிமெயில் பயனர் கணக்கில் உள்நுழைந்து, “Settings" பக்கத்திற்குச் செல்லவும்.  அதில், “General" tab-ல் Snippets-ற்கு அடியில் இருக்கும் No snippets - Show subject only.” என்பதைத் தேர்ந்தெடுத்து, “Save Changes” அழுத்தி மாற்றங்களைச் சேமிக்கவும்.

0 comments:

கருத்துரையிடுக