கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வெள்ளி, 29 ஜூன், 2012

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய விமானம் பரிசோதனை ரீதியாக நேற்று பயணம்

பகுதியிலிருந்து நேற்று பயணத்தை துவக்கியது. ஆன்ரி போர்ஷ்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகியோர் இந்த விமானத்தை ஸ்பெயின் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஓட்டிச் செல்கின்றனர்.

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் இன்று தரையிறங்கும் இந்த விமானம் 70 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டைப் பிரிக்கும் பைரனீஸ் மலைகளைக் கடந்து செல்லும் இந்த விமானத்தின் இறக்கை 63 மீட்டர் நீளமுடையது. இறக்கை முழுவதும் சூரிய ஒளியை கிரகிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மொராக்கோ மன்னர் முகமட்டின் அழைப்பின் பேரில் இந்த விமானம் மொராக்கோ நாட்டின் ரபாத் நகருக்கு செல்ல உள்ளது. உலகில் அதிக அளவில் சூரிய மின்சக்தியை மொராக்கோ நாடு உற்பத்தி செய்கிறது. சூரிய மின் உற்பத்தி மையங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் இயங்கி வருகின்றன.

0 comments:

கருத்துரையிடுக